20 நிமிடத்தில் 48 செய்திகள்...காலை தந்தி செய்திகள் | Thanthi Morning News | Speed News (02.05.2023)

Update: 2023-05-02 04:17 GMT

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும், புதுச்சேரியிலும் கனமழை வெளுத்து வாங்கியது. ஈரோடு, திருவண்ணாமலை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் இடி மின்னலுடன் பெய்த கனமழையால் குளுமையான சூழல் உருவானது. இதனால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.

தமிழகத்தில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. நீலகிரி, ஈரோடு, கோவை, திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலையில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மோடி தான் இந்தியாவின் அடுத்த பிரதமராக வர வேண்டும் என அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி, விருப்பம் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் நிதியை தவறாமல் பெறவே பாஜகவிடம் கைக்கட்டி நின்றதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், மக்களுக்காகவே கைக்கட்டி நின்றோம், தங்களுக்காக நிற்கவில்லை என்றும் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.

சூடானில் இருந்து மீட்கப்பட்ட 70 தமிழர்கள் கொச்சி விமான நிலையம் வந்தடைந்தனர். கொச்சி விமான நிலையத்தில் தமிழ்நாடு அரசின் அயலக தமிழர் நலவாழ்வு துறை ஆணையக துணை இயக்குனர் ரமேஷ் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர். இதில் சூடானில் இருந்து வரக்கூடியவர்கள் தடுப்பூசி போட்டதற்கான சான்றுடன் வர வேண்டும். இந்த சான்று இல்லாமல் வந்த 17 பேர் ஒரு வாரத்திற்கு தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பின்னர் மீட்கப்பட்ட 53 பேரை அவர்களது சொந்த ஊர்களுக்கு வேன், கார்களில் அதிகாரிகள் அனுப்பி வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்