எகிப்தில் மனிதர்களும் விலங்குகளும் இறந்த பிறகு மம்மிக்களாக பதப்படுத்தப்பட்ட பட்டறைகள், மற்றும் 2 பழங்கால கல்லறைகள் சக்காரா பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த பட்டறைகள் கிமு 380 மற்றும் 305ஐச் சார்ந்தவை. அதேபோல், 4 ஆயிரத்து 400 மற்றும் 3 ஆயிரத்து 400 ஆண்டுகள் பழமையான 2 மத போதகர்களின் கல்லறைகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.