16 நிமிடத்தில் 38 செய்திகள்... இரவு தந்தி செய்திகள் | Thanthi Night News | Speed News (07.05.2023)

Update: 2023-05-07 14:06 GMT

கிருஷ்ணகிரி, சேலம், கள்ளக்குறிச்சி, ஈரோடு, நீலகிரி, கோவை, திருச்சி, பெரம்பலூர், டெல்டா பகுதிகள் உட்பட 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. நாளை காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று முதல் வரும் 10ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

'தி கேரளா ஸ்டோரி' படத்தை எதிர்ப்பவர்கள் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளை ஆதரிப்பவர்கள் என மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் குற்றம் சாட்டியுள்ளார். 'தி கேரளா ஸ்டோரி' ஒரு சாதாரன படம் அல்ல என்ற அனுராக் தாகூர், பெண்களை பயங்கரவாத‌த்திற்குள் தள்ளும் சிலரது முகத்தை இந்த படம் வெளிச்சமிட்டு காட்டியுள்ளதாக தெரிவித்தார். சில அரசியல் கட்சிகள் இந்த படத்தை எதிர்ப்பதாகவும், அவர்கள் போராட்டம் நடத்தினால், ஐஎஸ்ஐஎஸ் அமைப்புகளை ஆதரிப்பவர்களாக இருப்பார்கள் என விமர்சித்தார்.

திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த வெற்றியழகன் என்பவர் இங்கிலாந்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு கவுன்சிலராக வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார். குடவாசல் அருகே பெரும்பண்ணையூர் கிராமத்தை சேர்ந்த பாப்பா சுப்ரமணியன் என்பவர், லண்டனில் கடந்த 15 வருடங்களாக வசித்து வரும் நிலையில், நான்காம் தேதி நடைபெற்ற தேர்தலில், ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே, பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் சென்ற அரசுப்பேருந்தை வழிமறித்து நிறுத்தி பெண் சராமரி கேள்வி எழுப்பினார். மண்மலை பகுதியில் தொடர்ந்து 4 நாட்களாக பேருந்து நிற்காமல் சென்றதாக கூறப்படும் நிலையில், பேருந்தை வழிமறித்து பெண் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இலவச பேருந்தில் பெண்களை ஏற்றினால் வருவாய் கிடைப்பதில்லை என ஓட்டுநர்கள் கூறுவதாக அவர் குற்றம் சாட்டினார்.

Tags:    

மேலும் செய்திகள்