தமிழகம் முழுவதும் 300 நியாயவிலைக் கடைகளில் இன்று முதல் தக்காளி விற்கப்படும் என கூட்டுறவுத்துறை தெரிவித்து உள்ளது.
வரத்து குறைவு காரணமாக தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனிடையே, பொதுமக்களின் நலன் கருதி நியாயவிலைக் கடைகளில் தக்காளி விற்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார். சென்னையில் 82 நியாய விலைக் கடைகளில் தக்காளி விற்பனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த திட்டத்தை மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தும் விதமாக, 300 நியாயவிலைக் கடைகளில் இன்று முதல் தக்காளி விற்பனை தொடங்கப்பட உள்ளது. காலை 10 மணி முதல் ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை தொடங்கும் என கூட்டுறவுத்துறை கூறி உள்ளது.