12 நிமிடத்தில் 30 செய்திகள்... இரவு தந்தி செய்திகள்

Update: 2023-04-28 13:58 GMT

அதிமுக எம்.பி. சி.வி.சண்முகத்திற்கு வழங்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பை திரும்ப பெற்ற தமிழக அரசு உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. வழக்கு விசாரணைக்கு வந்த போது, கொலை முயற்சி வழக்கு முக்கிய கட்டத்தை எட்டி உள்ள நிலையில், போலீஸ் பாதுகாப்பு இல்லாமல் வாழ்ந்து வருவதாக சி.வி. சண்முகம் தரப்பில் வாதிடப்பட்டது. இதனை பதிவு செய்த நீதிபதி, 8 வாரத்தில் மனுவை பரிசீலித்து முடிவெடுக்க அரசுக்கு உத்தரவிட்டனர்.

பெண்கள் அதிக அளவில் அரசியலுக்கு வர வேண்டும் என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார். குடியாத்தம் அருகே மகளிர் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் பேசிய அவர், பெண்கள் அரசியல் தமக்கான துறை இல்லை என்று ஒதுங்கி நிற்பதாகவும் எனவே அதிக அளவில் அரசியலுக்கு பெண்கள் வர வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

சென்னை LUZ CHURCH சாலையில் கே.பாலச்சந்தர் சதுக்கம் அமைக்கப்படும் என சென்னை மாநகராட்சி மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேயர் தலைமையில் நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில் 55 தீர்மாங்கள் நிறைவேற்றப்பட்டன. குறிப்பகா மறைந்த இயக்குனர் கே.பாலச்சந்தர் நினைவாக, காவிரி மருத்துவமனை அருகே ஆயிரம் சதுர அடி அளவில் போக்குவரத்து தீவு இடத்திற்கு அவரது பெயர் சூட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மாநகராட்சி அலுவலகத்தில் அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் போராட்டம் நடத்தும் நிலை ஏற்படும் என்று பேசியதால் சென்னை மாநகராட்சி கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. அதிமுக உறுப்பினர் சேட்டு பல்வேறு அடிப்படை பிரச்சினைகள் தீர்க்கப்படாததால் மக்களுடன் இணைந்து போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தார். இதனால் மாமன்ற கூட்டத்தில் திமுக, அதிமுக உறுப்பினர்கள் இடையே சலசலப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்