"200 பேர் மரணம்...உண்மையை மறைக்கும் அரசு"...பகிர் கிளப்பும் மத்திய அமைச்சர் | BIHAR | DELHI

Update: 2022-12-20 04:33 GMT

பீகாரில் கள்ளச் சாராயத்துக்கு 200 பேர் உயிரிழந்து விட்டதாகவும், நிதிஷ் குமார் அரசு உண்மையை மறைப்பதாகவும் மத்திய அமைச்சர் ஆர்.கே.சிங் குற்றம் சாட்டியுள்ளார்.

பீகாரில் கள்ளச்சாராயம் மற்றும் போலி மதுபானம் குடித்து 80-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய மின்துறை அமைச்சர் ஆர்.கே.சிங், பீகாரில் மது விலக்கை நிதீஷ் குமார் அரசால் அமல்படுத்த முடியவில்லை என்றார். அந்த மாநிலத்தில் அண்மையில் கள்ளச்சாராயம் மற்றும் போலி மதுபானம் குடித்து 200 பேர் உயிரிழந்ததாகவும், ஆனால், பீகார் அரசு உண்மையை மூடி மறைப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார். நிர்வாகத்தின் அலட்சியத்தால் இந்த சோகம் நடந்துள்ளதால், பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டிய கட்டாயத்தில் அரசு உள்ளது என்றும் அமைச்சர் ஆர்.கே.சிங் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்