ரஷ்ய அதிபர் புதினின் 2 நெருங்கிய கூட்டாளிகள் ஒரே நாளில் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் தலைவர்களான 77 வயது Nikolay Bortsov-உம், 57 வயது Dzhasharbek Uzdenov-உம் ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர்... Uzdenov உடல் நலக் குறைவால் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், Bortsov இறப்பிற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை. உக்ரைன் போர் துவங்கியது முதல் புதினுடன் நெருங்கிய தொடர்புடைய கிட்டத்தட்ட 20 ரஷ்ய உயர்மட்ட தலைவர்கள் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.