"12 மணி நேர வேலை.. உழைப்பு சுரண்டலுக்கு வழிவகுக்கும்"- வைகோ ஆவேசம்!

Update: 2023-04-22 12:14 GMT

தொழிலாளர்களின் வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்த வகை செய்யும் மசோதாவை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள வைகோ,

உழைப்புச் சுரண்டலுக்கு இச்சட்டம் சட்டபூர்வ அங்கீகாரத்தை அளித்துவிடும் என்றும், சட்டம் தொடர்பாக அமைச்சர்கள் அளித்த விளக்கம் நடைமுறைக்கு ஒவ்வாது என்றும் தெரிவித்து உள்ளார். இச்சட்டம் நடைமுறைக்கு வந்தால் தொழிலாளர்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாவார்கள் என்றும் வைகோ கூறி உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்