இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (24-01-2023)

Update: 2023-01-27 17:53 GMT

பழனி கோயில் கும்பாபிஷேக விழாவில், ஹெலிகாப்டர் மூலம் தூவப்பட்ட மலர்கள்....

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில், வெகு விமரிசையாக நடைபெற்றது கும்பாபிஷேகம்....16 ஆண்டுகளுக்கு பின் நடைபெற்ற நிகழ்வில், திரளான பக்தர்கள் பங்கேற்பு....

டிக்டாக் பிரபலம் டான்ஸர் ரமேஷ் 10 வது மாடியிலிருந்து விழுந்து உயிரிழப்பு...சந்தேக மரணமாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை....

சென்னை, அண்ணா சாலையில் கட்டடம் இடிந்து விழுந்து இளம் பெண் பலியான விவகாரம்...ஜேசிபி உரிமையாளர் மற்றும் ஓட்டுநரை கைது செய்த போலீசார்...

அதிமுக பொதுக்குழு வழக்கின் தீர்ப்பு அடுத்த வாரம் வெளியாக வாய்ப்பு....உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூசகம்....

ஈரோடு கிழக்குத் தொகுதியில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கியது, தேமுதிக.....கட்சி நிர்வாகிகளுடன் சென்று வீடுவீடாக வாக்குசேகரித்தார், வேட்பாளர் ஆனந்த்.....

சீமைக்கருவேல மரங்களை அகற்ற பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும்...தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை...

வரும் 30, 31 தேதிகளில் திட்டமிட்டிருந்த வங்கிகளின் வேலைநிறுத்தப் போராட்டம் தள்ளி வைப்பு...முத்தரப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் முடிவு...

கோயில்களையும், அவற்றில் உள்ள செல்வங்களையும் பாதுகாக்க, இந்துசமய அறநிலையத்துறையால் மட்டுமே முடியும்...அமைச்சர் சேகர்பாபு கருத்து...

ஈரோடு கிழக்குத் தொகுதியில் இடைத்தேர்தலில், ஈ.பி.எஸ் தரப்பில் போட்டியிடும் வேட்பாளர் யார்?....https://youtu.be/kpCRmAd1ISQவிரைவில் அறிவிப்பு வெளியாகும் எனத் தகவல்...

Tags:    

மேலும் செய்திகள்