சென்னை நந்தனத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆவினின் புதிய பொருட்களை பால்வளத்துறை அமைச்சர் நாசர் அறிமுகப்படுத்தினர். அதன்படி, பலாப்பழ ஐஸ்கிரீம், வெள்ளை சாக்லேட், குளிர்ந்த காஃபி, வெண்ணெய் கட்டி, பாசந்தி, ஆவின் ஹெல்த் மிக்ஸ், பாலாடை கட்டி அடுமனை யோகர்ட், ஆவின் பால் பிஸ்கட், ஆவின் வெண்ணெய் முறுக்கு ஆகிய 10 புதிய பொருட்கள் விற்பனைக்கு வந்துள்ளன. இதன் மூலம் மாதத்திற்கு 2 கோடி ரூபாய் லாபம் கிடைக்கும் என அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார்.