“ஓபிஎஸ் A ஃபார்ம், B ஃபார்ம் கொடுத்தது மோசடி“ - குமார், அதிமுக கர்நாடக மாநில செயலாளர்
ஓபிஎஸ் தரப்புக்கு எதிராக கர்நாடக தலைமை தேர்தல் அதிகாரியிடம் எடப்பாடி பழனிசாமி தரப்பு புகார் மனு வழங்கியுள்ளது...
அதிமுக பொதுக்குழு தீர்மானம் குறித்த நீதிமன்ற தீர்ப்பு வரும்வரை, எடப்பாடி பழனிசாமியை அதிகாரப்பூர்வ அதிமுகவாக அங்கீகரித்து இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் அதிமுகவின் பி ஃபார்மை (B form) சட்டவிரோதமாக பயன்படுத்தியுள்ளதாக, ஈபிஎஸ் தரப்பில் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். காந்திநகர் தொகுதியில் ஓபிஎஸ் தரப்பில் அதிமுக சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனு ஏற்றுக் கொள்ளப்பட்டதாக வெளியான தகவலை தொடர்ந்து, அந்த வேட்பு மனுவை நிராகரிக்க வேண்டும் என கர்நாடக தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக மாநில செயலாளர் குமார் புகார் மனு அளித்துள்ளார். இந்த புகார் மனுவில் இரட்டை இலை சின்னத்தை தங்களைத் தவிர கர்நாடக மாநிலத்தில் வேறு எந்த தரப்புக்கும் ஒதுக்கக் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.