மறு வாக்கு எண்ணிக்கையில் காங். க்கு காத்திருந்த அதிர்ச்சி

Update: 2023-05-14 03:06 GMT

கர்நாடகா மாநிலம் ஜெயநகர் தொகுதியில், மறுவாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டதில், 16 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

ஜெய்நகர் தொகுதியில், முன்னதாக 17 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் சி. கே. ராமமூர்த்தி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. தபால் வாக்குகள் முறையாக எண்ணப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து, ஜெய்நகர் தொகுதியில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டது. இதில், 160 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் சௌமியா ரெட்டி வெற்றி பெற்றதாக அறிவிப்பு வெளியானது. இதனால், பாஜக, காங்கிரஸ் கட்சியினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு நிலவியது. இதனிடையே, மீண்டும் மறு வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என, பாஜக வேட்பாளர் ராமமூர்த்தி கோரிக்கை விடுத்தார். அதன்படி, மீண்டும் நடத்தப்பட்ட மறு வாக்கு எண்ணிக்கையில், பாஜக வேட்பாளர் சி. கே. ராமமூர்த்தி 16 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்