"டெய்லி ஸ்லோகம் சொல்லுங்க...பாஜகவை பலப்படுத்துங்க" - பிரச்சாரம் முடிந்தும் ஓயாத கோஷங்கள்... கர்நாடக தேர்தல் களத்தில்...
பெங்களூருவில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் கர்நாடக காங்கிரஸ் தலைவர் சிவக்குமார் வழிபாடு நடத்தினார். கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், கட்சிகளின் தேர்தல் பிரச்சாரம் நேற்றுடன் நிறைவடைந்தது. இந்த நிலையில் கே.ஆர். மார்க்கெட் பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் சிவக்குமார் சிறப்பு பிரார்த்தனை செய்தார். இதனிடையே பாஜகவினரும் மாநிலம் முழுவதும் உள்ள கோவில்களில் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.