பெங்களூருவில் அமித்ஷாவுக்கு எதிராக காங்கிரஸ் புகார்

Update: 2023-04-28 02:07 GMT

உள்துறை அமைச்சர் அமித் ஷா மீது நடவடிக்கை எடுக்குமாறு பெங்களூரு காவல் நிலையத்தில் காங்கிரஸ் புகாரளித்துள்ளது.

கர்நாடகாவில் பிரசாரம் செய்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மாநிலத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைந்தால், கலவரங்கள் ஏற்படும் என பேசியதற்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்தது. இந்த விவகாரம் தொடர்பாக அமித்ஷா மீது நடவடிக்கையை எடுக்கக்கோரி பெங்களூரு ஹைகிரவுண்ட் காவல் நிலையத்தில் காங்கிரஸ் தலைவர்கள் புகார் அளித்துள்ளனர். உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக கூட்டத்தில் காங்கிரஸ் குறித்து அவதூறாக பேசியதாகவும், மாநிலத்தில் மத நல்லிணக்கம் சீர்குலைக்கும் நோக்கத்தில் பேசியதாகவும் காங்கிரஸ் குற்றம் சாட்டியிருக்கிறது. புகாரளித்த பின்னர் காங்கிரஸ் கர்நாடக தேர்தல் பொறுப்பாளர் ரன்தீப் சிங் பேசியபோது, சித்தாராமையாகவும், டி.கே. சிவக்குமாரும்தான் பிஎஃப்ஐ இயக்கத்தை தடை செய்யுமாறு வலியுறுத்தினார்கள் எனவும் பசவராஜ் பொம்மை அரசுதான் நடவடைக்கையும் எடுக்கவில்லை எனவும் குற்றம் சாட்டினார். இப்போது தோல்வி பயத்தால், இந்த விஷயத்தில் உண்மைக்குப் புறம்பானவற்றை பாஜக பேசி வருகிறது எனவும் ரன்தீப் சிங் குற்றம் சாட்டியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்