"கர்நாடகாவில் 40% கமிஷன் வாங்கிய பாஜகவுக்கு 40 இடம்தான் கிடைக்கும்" - ராகுல் காந்தி பரபரப்பு பிரச்சாரம்

Update: 2023-04-29 01:38 GMT

கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியமைத்தால் ஒவ்வொரு கிராம பஞ்சாயத்துக்கும் ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும் என ராகுல் காந்தி அறிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலம் ஜவார்கியில் கொட்டும் மழையில் காங்கிரரசுக்கு வாக்கு சேகரித்த ராகுல் காந்தி, வாக்காளர்களை கவரும் அறிவிப்புகளை வெளியிட்டார். மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொரு கிராம பஞ்சாயத்துக்கும் ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும் என்றார். தெலுங்கானாவை ஒட்டிய கல்யாண் கர்நாடகா மண்டலத்திற்கு 5 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கப்படும் எனவும் அறிவித்தார். மாநிலத்தில் காலியாக இருக்கும் 50 ஆயிரம் காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என வாக்குறுதியளித்த ராகுல் காந்தி, காங்கிரஸ் 150-க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றிப்பெற்று ஆட்சியை பிடிக்கும் என்றார். 40 % கமிஷன் வாங்கிய பாஜக, தனது இஷ்ட நம்பரான 40 இடங்களில் மட்டுமே வெற்றிப்பெறும் எனவும் ராகுல் காந்தி குறிப்பிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்