திருவண்ணாமலை, அதன் சுற்றுவட்டார பகுதியில், இரண்டு மணி நேரத்துக்கு மேலாக, கனமழை பெய்தது. வேங்கிக்கால், அண்ணா நகர், சோமாசிப்பாடி உள்ளிட்ட இடங்களில், இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால், கோடை வெயிலின் தாக்கம் குறைத்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.