"24 மணி நேரத்தில் எழுத்தாகவும், இணையத்திலும் மன்னிப்பு கேட்க வேண்டும்" ரூபா ஐபிஎஸ்-க்கு ரோகினி ஐஏஎஸ் பகிரங்க நோட்டீஸ்
- கர்நாடகாவில், ரூபா ஐபிஎஸ் - ரோகினி சிந்துரி ஐஏஎஸ் இடையேயான மோதலில், ரூபா பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என ரோகினி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
- கர்நாடகாவில் பணியாற்றி வந்த ஐஏஎஸ் அதிகாரி ரூபா, இந்து சமய அறநிலையத்துறையின் ஆணையர் ரோகினி சிந்துரி ஐஏஸ்-ன் தனிப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து இருவருக்கும் இடையே மோதல் அதிகரித்தது.
- இந்நிலையில், 24 மணி நேரத்தில் ரூபா எழுத்துப் பூர்வமாகவும், சமூக வலைதளங்களிலும் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும், இழப்பீடாக ஒரு கோடி ரூபாய் வழங்க வேண்டுமெனவும் வழக்கறிஞர் மூலம் ரோகினி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
- இந்த நோட்டீஸை புறக்கணிக்கும் பட்சத்தில் ரூபா மீது குற்றவியல் நடைமுறை சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.