ராகுல் காந்திக்கு சிறை தண்டனை... எதிர்க்கட்சிகள் இன்று குடியரசுத் தலைவரை சந்திக்க திட்டம்

Update: 2023-03-24 02:06 GMT
  • கடந்த 2019-ஆம் ஆண்டு தேர்தலின்போது, பிரதமர் மோடியின் சமூகம் குறித்து அவதூறாக பேசியதாகத் தொடுக்கப்பட்ட வழக்கில், ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் நேற்று பரபரப்பு தீர்ப்பை அளித்துள்ளது.
  • இதுகுறித்து, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இல்லத்தில், கட்சியின் மூத்த தலைவர்கள், எம்.பி.க்கள் உள்ளிட்டோர் நேற்று மாலை கூடி ஆலோசனை நடத்தினார்கள்.
  • சுமார் இரண்டு மணி நேரம் நடைபெற்ற அந்த கூட்டத்தில், எதிர்க்கட்சித் தலைவர்களுடன் இன்று காலை 10 மணிக்கு மல்லிகார்ஜுன கார்கே ஆலோசனை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.
  • அதைத் தொடர்ந்து, அனைத்து எதிர்க் கட்சிகளும் நாடாளுமன்றத்தில் இருந்து டெல்லி விஜய் சௌக் பகுதி வரை நடந்து போராட்டம் நடத்தவும், அதன் பிறகு எதிர்க்கட்சிகள் ஒன்றாக சேர்ந்து குடியரசுத் தலைவரை சந்திக்கவும் திட்டமிடப்படுடள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்