'வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா..' 16 ஆண்டுகளுக்கு பின் நடைபெறும் கும்பாபிஷேகம் - 83 வேள்வி குண்டங்கள், 150 சிவாச்சாரியார்கள்
திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி கோவில் கும்பாபிஷேக விழா, இன்று காலை 8 மணி முதல் 9 மணி வரை நடைபெறுகிறது.
முன்னதாக எட்டாவது கால யாகசாலை பூஜை அதிகாலை 4 மணிக்கு தொடங்கியது. 83 வேள்வி குண்டங்களில், 150 சிவாச்சாரியார்கள் வேள்விகளை நடத்தி வருகின்றனர்.
அதனைத் தொடர்ந்து கோவில் விமானங்களுக்கு புனிதநீர் தெளிக்கப்பட்டு, சிறப்பு தீபாராதனை பூஜைகள் நடத்தப்படுகிறது.
ஹெலிகாப்டர் மூலம் கோவில் கோபுரங்களில் மலர் தூவ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கும்பாபிஷேக நிகழ்வை நேரில் காண 6 ஆயிரம் பேருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.