95ஆவது ஆஸ்கர் விருது வழங்கும் விழா - முதன்முறையாக இந்தியாவில் இருந்து 3 படங்கள் - விருதுக்காக காத்திருக்கும் ரசிகர்கள்

Update: 2023-03-13 01:59 GMT
  • 95ஆவது ஆஸ்கர் விருது வழங்கும் விழா, இந்திய நேரப்படி இன்று அதிகாலை சுமார் 5 மணி அளவில், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் துவங்கி நடைபெற்று வருகிறுது.
  • இந்தியாவில் இருந்து, எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில், ஜூனியர் என்டிஆர், ராம் சரண் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ஆர்ஆர்ஆர் படத்தின் "நாட்டு நாட்டு" பாடல் ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரை பட்டியலில் இடம் பெற்றுள்ளது.
  • "நாட்டு நாட்டு" பாடலுக்கு இசையமைத்த எம்.எம். கீரவாணி, பாடகர்கள் ராகுல் சிப்ளிகட்ச், கால பைரவா ஆகியோர் ஆஸ்கர் விருது வழங்கும் விழா மேடையில், அந்த பாடலை இசையமைத்து பாடுகின்றனர்.
  • இந்த விழாவில், இந்தியாவில் இருந்து ஆல் தட் பிரீத்தஸ் என்ற குறும்படம், தி எலிபன்ட் விஸ்பரர்ஸ் ஆவணப்படமும் ஆஸ்கார் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
  • இந்தியா சார்பில், முதல் முறையாக மூன்று படங்கள் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், எத்தனை ஆஸ்கர் விருதுகள் கிடைக்கும் என இந்திய ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்