- நடிகர் மயில்சாமி இறுதியாக மகா சிவராத்திரி விழாவில் பங்கேற்ற கோயிலின் கருவறையில், அவரது புகைப்படத்தை வைத்து சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது.
- சென்னை கேளம்பாக்கம் அருகே மேலக் கோட்டையூரில் உள்ள மேகநாதீஸ்வரர் ஆலயத்தில், மகா சிவராத்திரி விழாவில் பங்கேற்று வீடு திரும்பிய நடிகர் மயில்சாமி, உயிரிழந்தார்.
- இந்த நிலையில் அக்கோயில் கருவறையில் மயில்சாமியின் புகைப்படத்தை வைத்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
- பல ஆண்டுகளாக கோயிலுக்கு மயில்சாமி திருப்பணி ஆற்றி வந்ததாகவும், அவரது ஆத்மா சாந்தியடைய சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டதாகவும் கோயில் அர்ச்சகர் கூறியுள்ளார்.