சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில், பேருந்துக்காக காத்திருந்து தூங்கிக் கொண்டிருந்த பயணியின் கைப்பையை திருடிச் சென்ற நபரை போலீசார் கைது செய்தனர்.
சேலத்தை சேர்ந்த தமிழகன் என்பவர், சேலம் செல்வதற்காக கோயம்பேடு பேருந்து நிலையத்தில் காத்திருந்துள்ளார்.
அப்போது, தனது கைப்பையை அருகில் வைத்து உறங்கியுள்ளார்.
கண் விழித்துப் பார்க்கும்போது, கைப்பை காணாமல் போயிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், காவல்நிலையத்தில் புகார் அளித்தார், சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் கைப்பையை திருடிச் சென்ற விழுப்புரத்தை சேர்ந்த செந்தில் என்பவரை போலீசார் கைது செய்தனர்.