"இன்று ஈரோடு-நாளை நம் நாடு" - முதல்வரின் பரபர அறிக்கை

Update: 2023-03-04 02:15 GMT
  • ஈரோட்டு திராவிடப் பாதை இந்தியாவிற்கே வழிக்காட்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
  • இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று இந்தியாவை மதவாதப் ஃபாசிச சக்திகள் சூழந்துள்ளதாகவும், பன்முகக்தன்மையை சிதைக்க நினைப்பவர்களின் கைகளில் நாடு சிக்கியிருக்கிறது என்றும் புகார் கூறியுள்ளார்.
  • பிறந்தநாள் விழாப் பொதுக்கூட்டத்தின் நோக்கம், தம்மை வாழ்த்துவதற்காக அல்ல என்றும், இந்திய ஒன்றியத்தில் உள்ள மக்கள் உரிமையுடனும் ஒற்றுமையுடனும் வாழ வேண்டும் என்பதே என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
  • நாம் கட்டமைக்கும் கூட்டணியின் வியூகத்தால் இந்திய ஒன்றிய அளவில் ஏற்படும் அரசியல் மாற்றங்களும் 'நாற்பதும் நமதே, நாடும் நமதே' என்ற முழக்கத்தை முழுமையான வெற்றியாக மாற்றும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
  • இன்று ஈரோடு.. நாளை நம் நாடு..' என இந்த வெற்றிப் பயணம் தொடரும் என்றும், ஈரோடு கிழக்கைப் போல இந்தியா முழுவதும் விடியும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்