திமுக ஆவடி மாநகர செயலாளர் விடுவிப்பு - திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு

Update: 2023-02-08 02:35 GMT

திமுகவின் ஆவடி மாநகர செயலாளர் ஆசிம்ராஜாவை பொறுப்பிலிருந்து விடுவித்து, திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

அவருக்கு பதிலாக ஆவடி மாநகர பொறுப்பாளராக சன்.பிரகாஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.

அமைச்சர் ஆவடி நாசரின் மகன் ஆசிம்ராஜா, திமுக உட்கட்சி தேர்தல் மூலம் ஆவடி மாநகர செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில், ஆசிம்ராஜாவை பொறுப்பில் இருந்து விடுவிப்பதாக அறிவித்துள்ள திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், சன்.பிரகாஷ் ஆவடி மாநகர பொறுப்பாளராக நியமிக்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்