பிளாஸ்டிக் பையில் சமையல் கேஸ் விற்பனை - மக்கள் வாங்கி செல்லும் அதிர்ச்சி காட்சிகள்

Update: 2023-01-03 02:30 GMT

பாகிஸ்தானில் கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் மக்கள் பிளாஸ்டிக் பேக்கில் சமையல் எரிவாயுவை நிரப்பிச் செல்லும் காட்சிகள் வெளியாகியுள்ளது. கடன் மேல் கடன் வாங்கிய பாகிஸ்தான், நிதி பற்றாக்குறை, பணவீக்கத்துடன் போராடுகிறது.

விலைவாசி உயர்வுக்கு மத்தியில் மக்கள் வலுவான பிளாஸ்டிக் பேக்குகளில் சமையல் எரிவாயுவை நிரப்பிச் செல்லும் காட்சிகள் வெளியாகியுள்ளது.

சிலிண்டர்கள் பாகிஸ்தான் ரூபாய் மதிப்பில் 10 ஆயிரம் ரூபாய்க்கு விற்பதால், 900 ரூபாய்க்கு விற்கும் பிளாஸ்டிக் பேக்குகளில் எரிவாயு நிலையங்களில் எரிவாயுவை நிரப்பி செல்வதாக கூறும் மக்கள் கம்ப்ரசர் வாயிலாக வீட்டில் பயன்படுத்துவதாக தெரிவிக்கிறார்கள்.

இதற்கிடையே எரிவாயு வெடிப்பு சம்பவங்களால் மக்கள் காயம் காரணமாக மருத்துவமனை வரும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்