"அனைவரையும் முன்னேற்றுவது சிலருக்கு பிடிக்கவில்லை" - முதலமைச்சர் ஸ்டாலின்
- தோள்சீலை போராட்டத்தின் 200 ஆண்டு நிறைவையொட்டி திமுக கூட்டணி கட்சிகளின் சார்பில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயிலில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், தமிழக சமூக நீதி வரலாற்றில் வீரமிகு போராட்டமான தோள்சீலை போராட்டத்தின் 200 ஆண்டு நிறைவு பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதில் பெருமை என்று கூறினார்.
- வீரமிகு போராட்டத்தால் அடக்குமுறை அடக்கப்பட்டதை இளைய சமூகத்திற்கு எடுத்துரைப்பதற்காக இந்த நிகழ்வு நடைபெறுவதாக கூறினார்.
- தமிழகம் மதத்தின், சாதியின் பெயரால் பிரித்தனர். பெண்கள் வீட்டுக்குள் முடக்கப்பட்டனர். இதற்கு எதிராக வள்ளலார், வைகுண்டர், பெரியார் போன்றார் தொடர்ந்த போரால் தமிழகம் தலைநிமிர்ந்தது என்றார்.
- திராவிட மாடல் அரசு பெண்களுக்கு உயர்கல்வி அளிப்பதில் முக்கியத்துவம் அளித்து வருகிறது எனவும் அனைத்து தரப்பு மக்களின் முன்னேற்றத்திற்கு பாடுபடுவதால் திமுக அரசை சிலர் எதிர்க்கிறார்கள் என்றார்.