- கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள பாகிஸ்தானிற்கு சீனா, ஈரான் மற்றும் உஸ்பெக்கிஸ்தான் உதவி செய்ய முன் வந்துள்ளன.
- 12 ஆயிரத்து 691 கோடி டாலர் அன்னிய கடன் சுமையுடன், 62.46 லட்சம் கோடி பாகிஸ்தான் ரூபாய் அளவிலான மொத்த கடன் சுமையில் பாகிஸ்தான் தடுமாறி வருகிறது.
- கடும் விலைவாசி உயர்வு, மின்வெட்டுகளுடன், அன்னிய செலாவணி கையிருப்பு ஒரு கட்டத்தில் 290 கோடி டாலராக குறைந்தது
- . நிலைமையை சமாளிக்க, சர்வதேச நாணய நிதியத்திடம் 650 கோடி டாலர் அவரச கடன் பெற முயற்சி செய்து வருகிறது.
- இந்நிலையில் பாகிஸ்தானிற்கு சீனா 70 கோடி டாலர் கடன் உதவி அளித்துள்ளது.
- இதன் விளைவாக பாகிஸ்தானின் அன்னிய செலவாணி கையிருப்பு 20 சதவீதம் அதிகரித்து 400 கோடி டாலராக அதிகரித்துள்ளது.
- பாகிஸ்தானுடனான வர்த்தகத்தை 500 கோடி டாலராக அதிகரிக்க, எல்லைப் பகுதிகளில் ஆறு புதிய சந்தைகளை ஈரான் உருவாக்கியுள்ளது.
- பாகிஸ்தானுடனான வர்த்தகத்தை 100 கோடி டாலராக அதிகரிக்க உஸ்பெக்கிஸ்தான் ஒப்பந்தம் செய்துள்ளது.