திமுக தலைவர் தேர்தல் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மனு தாக்கல்
திமுக தலைவர் தேர்தல் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மனு தாக்கல்
திமுக தலைவர் பதவிக்கான தேர்தலுக்காக, முதலமைச்சர் ஸ்டாலின் இன்று வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார்.
திமுகவில் 15வது உட்கட்சி தேர்தல் நடந்து வருகிறது.
இதன்படி பேரூராட்சி, நகராட்சி பதவிக்கான நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் தேர்வு நிறைவடைந்தது.
தொடர்ந்து உயர் நிலையில் உள்ள தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர், தணிக்கை குழு உறுப்பினர்கள் ஆகியோருக்கான தேர்தல் வரும் 9ஆம் தேதி பொதுக்குழு கூட்டத்தில் நடைபெறும் என திமுக தலைமை அறிவித்தது.
இந்நிலையில், மேற்கண்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று காலை 10 மணி முதல் 5 மணி வரை, திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் நடைபெற உள்ளது.
இதில், திமுக தலைவர் பதவிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார். இதேபோல், பொதுச் செயலாளர் பதவிக்கு துரைமுருகனும், பொருளாளர் பதவிக்கு டி.ஆர்.பாலுவும் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளனர்.