குட் நியூஸ் சொன்ன மெட்ரோ நிர்வாகம்... "மெட்ரோ பணிகளால் இனி வாகன நெரிசல் இருக்காது"
ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் இறங்கும் பயணிகள் நேரடியாக டிஎல்எப் ஐடி பூங்காவிற்கு வரும் வகையில் மெட்ரோ கனெக்ட் (Metro connect) எனும் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
அதன்படி ஆலந்தூர் மெட்ரோ நிலையத்திலிருந்து போரூர் டி.எல்.எப் சைபர் சிட்டி வரை 4 குளிர்சாதன பேருந்துகளும் தொடர்ந்து இயக்கப்பட உள்ளன.
குறைந்த பட்ச தொகையாக 40 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது.
காலை ஆறு மணிக்கு தொடங்கும் மெட்ரோ கனெக்ட் சேவை இரவு 10 மணி வரை செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது..
சென்னை மெட்ரோ ரயில் நிர்வாக இயக்குனர் சித்திக், சென்னை மெட்ரோ ரயிலில் அமைப்பு மற்றும் இயக்கம் இயக்குனர் ராஜேஷ் சதுர்வேதி உள்ளிட்டோர் கலந்து கொண்டு டெம்போ வேன் சேவையை துவக்கி வைத்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மெட்ரோ ரயில் நிர்வாக இயக்குநர் சித்திக், மெட்ரோ பணிகளால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் அடுத்த ஓராண்டிற்குள் குறையும் என்றார்.