நடிகர் வடிவேலுவின் தாயார் சரோஜினி(87) உடல்நலக்குறைவால் நேற்று இரவு காலமானார்
தாயார் மறைவு செய்தி கேட்டு தொலைபேசி மூலம் ஆறுதல் தெரிவித்த முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நடிகர் வடிவேல் நன்றி கூறி
மதுரையில் நடிகர் வடிவேல் தாயார் காலமானார் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக ஆறுதல்.
மதுரை விரகனூரில் வசித்து வந்த நடிகர் வடிவேலுவின் தாயார் சரோஜினி (எ) பாப்பா (87) நேற்று இரவு உடல்நல குறைவால் காலமானார்.
இது குறித்து வடிவேல் பேசும் பொழுது தாய் சரோஜினி கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவு காரணமாக மதுரை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தால் இந்நிலையில் நேற்று உடல்நிலை குறைவு காரணமாக திடீரென காலமானதாகவும் தெரிவித்துள்ளார்.
தனது தாய் மறைவிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே வாசன் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் தொலைபேசி வாயிலாக ஆறுதல் தெரிவித்து உள்ளனர்.