காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (08-08-2024)

Update: 2024-08-08 00:48 GMT

ஒலிம்பிக் மல்யுத்த இறுதிப்போட்டியில் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து இந்திய வீராங்கனை வினேஷ் போஹத் மேல்முறையீடு........... விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்ப்பு.

பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்ற மல்யுத்த வீராங்கனை அன்டிம் பங்கல் மீது விதிமீறல் புகார்.........இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப இந்திய ஒலிம்பிக் கமிட்டி முடிவு

நிலச்சரிவு பாதிப்புகளை ஆய்வு செய்ய வரும் 10-ம் தேதி வயநாடு வருகிறார் பிரதமர் மோடி...பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் தெரிவிக்கிறார்

தமிழ்நாட்டில் கடவுள் மறுப்பு கொள்கை என்பது வேலைக்கு ஆகாது என்பது திமுகவிற்கு தெரிந்துவிட்டது...விரைவில் முதலமைச்சர் ஜெய் ஸ்ரீராம் சொல்லலாம் என பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை பேட்டி

முதுகலை நீட் நுழைவுத் தேர்வுக்கான வினாத்தாள்கள் 70 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையா?...சமூக வலைதளத்தில் வலம் வரும் தகவல்களுக்கு மத்திய அரசு மறுப்பு

பொறியியல் படிப்புகளில் சேர விண்ணப்பித்த மாணவர்களின் மொபைல் எண்கள் உள்ளிட்ட விவரங்கள் தனியார் கல்லூரிகளுக்கு விற்பனை...சுமார் ஒரு லட்சம் மாணவர்களின் தகவல்கள் விற்கப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல்

Tags:    

மேலும் செய்திகள்