"+2 தேர்வில் CBSE பாடத்திலிருந்து கேள்வி க்ரேஸ் மார்க்' வழங்க வேண்டும்" ராமதாஸ் வலியுறுத்தல்..!

Update: 2023-03-29 03:54 GMT
  • 12-ஆம் வகுப்பு கணிதப் பாடத்தில் சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்திலிருந்து வினாக்கள் கேட்கப்பட்ட விவகாரத்தில், மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்பட வேண்டுமென, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
  • இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், கணிதப்பாடத் தேர்வில் குறைந்தது 3 வினாக்கள் மத்திய இடைநிலை கல்வி வாரிய பாடத்திட்டத்திலிருந்து கேட்கப்பட்டுள்ளன - கணிதத்தில் 100 சதவீத மதிப்பெண் பெறுவது தான் மாணவர்களின் இலக்கு - ஆனால், சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தையும் படித்தால் தான் 100 சதவீத மதிப்பெண் எடுக்க முடியும் என்பது அறமல்ல என குறிப்பிட்டுள்ளார்.
  • இதுகுறித்து தமிழக அரசின் தேர்வுத்துறை விசாரணை நடத்த வேண்டும் என்றும் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்