- நூறு நாள் வேலைத் திட்டத்தை ஜிபிஎஸ் கருவி மூலம் கண்காணிக்க வாய்ப்பில்லை என நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
- தென்காசி மாவட்டம், தாருகாபுரத்தில், நூறு நாள் வேலைத் திட்டத்தின் பணியாளர்கள், தனி நபர்களின் விவசாய நிலத்தில் வேலை செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
- இதனால் அரசுக்கு இழப்பை ஏற்படுத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி, உயர்நீதின்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
- இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, நூறு நாள் வேலைத் திட்ட பணியை ஜிபிஎஸ் மூலம் கண்காணிக்க முடியுமா என்று அரசுக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பி இருந்தனர்.
- இந்த மனு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, நூறுநாள் திட்டப்பணிகளை ஜிபிஎஸ் மூலம் கண்காணித்தால் அதிக செலவாகும் என்பதால், அதற்கு வாய்ப்பில்லை என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
- இதையடுத்து, நூறு நாள் திட்டப்பணியில் முறைகேடுகளை தடுக்க வும், முறைகேட்டில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அரசு சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.