"பிட் பேப்பர், ஷேரிங் இஸ் கேரிங்-க்கு எல்லாம் 'நோ..' "இதுதான் ஸ்ட்ரிக்ட் ரூல்ஸ்... 10,12ம் வகுப்பு மாணவர்களே உஷார்..!

Update: 2023-03-12 03:47 GMT
  • நாளை துவங்குகிறது 12ம் வகுப்பு பொதுத்தேர்வு... என்னென்ன செய்யலாம் என்பதை விட முக்கியம் எதையெல்லாம் செய்யக்கூடாது என்பது... அப்படிப்பட்ட 15 வகை ஒழுங்கீன நடவடிக்கைகளையும், அதற்குரிய தண்டனைகளையும் பட்டியலாக வெளியிட்டுள்ளது தேர்வுத்துறை...
  • பிட் எடுத்துச் செல்லும் மாணவர்களாக இருந்தால் கொஞ்சம் கவனம் தேவை... அறை கண்காணிப்பாளரிடம் முன்கூட்டியே சரணடைந்து விட்டால் வெறும் எச்சரிக்கையோடு போய் விடும்... விடாப்பிடியாக அதே தவறை மீண்டுன்ம் செய்தால் தேர்வறையை விட்டு நடையைக் கட்ட வேண்டியது தான்...
  • அதையும் மீறி பிட் பேப்பர்கள் பறக்கும் படையிடம் சிக்கினால் அவ்வளவுதான்... தேர்வு அறையை விட்டு வெளியேற்றப்படுவதோடு, அன்றைய தேர்வும் அந்த மாணவருக்கு ரத்தாகிவிடும்... போதாத குறைக்கு ஒரு ஆண்டுக்கு தேர்வெழுத முடியாமல் கைகள் கட்டிப்போடப்படும்...
  • பிட் பேப்பர் தானே கொண்டுபோகக் கூடாது... பக்கத்து மாணவரைப் பார்த்து எழுதிக் கொள்கிறேன் என்றால், அவர்களுக்கும் அன்றைய தேர்வு ரத்து... ஓராண்டுக்கு தேர்வெழுத முடியாது...
  • எல்லோர் கண்களிலும் மண்ணைத் தூவி விட்டு பிட் பேப்பர் வைத்து எழுதி இருந்தாலும், ஒருவேளை சிக்கினால் அந்த மாணவர் எழுதிய அனைத்து தேர்வுகளும் ரத்து... கூடுதலாக ஒரு ஆண்டுக்கு தேர்வும் எழுத முடியாது...
  • வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் ஸ்டைலில் ஆள்மாறாட்டம் செய்ய நினைத்தால், அடுத்து தேர்வெழுதவே முடியாது... நிரந்தரமாக தேர்வெழுத தடை விதிக்கப்படும்...
  • ஷேரிங் இஸ் கேரிங் என்று விடைத்தாள்களை பரிமாறினால், தேர்வு ரத்தாவதுடன் குறிப்பிட்ட பருவ தேர்வுகளுக்கு அனுமதியும் கிடையாது...
  • அதிலும் சில மாணவர்கள் விடைத்தாளில் விடையைத் தவிர வேறு என்னவெல்லாமோ எழுதி வைப்பார்கள்... "ஐயா தயவு செய்து மார்க் போடுங்க" என்று கெஞ்சினாலும் சரி... "ஒழுங்கா மார்க் போடுறீங்களா இல்லையா?" என மிரட்டினாலும் சரி சம்பந்தப்பட்ட பாடத் தேர்வு ரத்து...
  • சில மாணவர்கள் கெத்து காட்டுவதாக நினைத்து தேர்வு அலுவலர்களை திட்டக் கூட செய்வார்கள்... அவ்வாறு செய்தால் மறு பேச்சுக்கே இடமில்லை... உடனடியாக அவர்கள் அறையை விட்டு அப்புறப்படுத்தப்பட்டு மற்ற பாடத் தேர்வுகள் எழுதவும் தடை போடப்படும்...
  • தேர்வறையை விட்டு விடைத்தாள் வெளியே போனாலோ, அல்லது விடைத்தாளுக்கு சிறிது சேதாரம் ஆனாலும் கூட அன்றைய தேர்வே ரத்து செய்யப்படும்...
  • சில மாணவர்கள் புத்திசாலித்தனமாக நடப்பதாக நினைத்துக் கொண்டு கேள்வித் தாளை மட்டும் வெளியே அனுப்பி விடைக்காக காத்திருப்பார்கள்... அவர்களுக்கு அன்றைய தேர்வு ரத்தாவதுடன், 3 ஆண்டுகளுக்குத் தேர்வே எழுத முடியாதபடி தடை விதிக்கப்படும்...
Tags:    

மேலும் செய்திகள்