சூடு பிடித்தது அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரம் : வேட்பாளர்கள் டிரம்ப் - ஜோ பிடன் நேருக்குநேர் விவாதம்(தமிழில்)

அமெரிக்க அதிபர் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் வேட்பாளர்களான அதிபர் டிரம்ப் மற்றும் ஜோ பிடன் இடையே நேருக்கு நேர் காரசார விவாதம் நடைபெற்றது.;

Update: 2020-09-30 04:02 GMT
அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 3ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் வேட்பாளர்களாக களம் இறங்கியுள்ள குடியரசு கட்சியை சேர்ந்த தற்போதைய அதிபர் டிரம்பும், ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடனும் நேருக்கு நேராக தொலைக்காட்சி விவாதத்தில் பங்கேற்றனர். 
அப்போது பேசிய அதிபர் டிரம்ப், உச்சநீதிமன்ற நீதிபதியாக எமிபேரட்டை பரிந்துரை செய்ய தனக்கு முழு அதிகாரம் இருக்கிறது என்றார். 
மக்களுக்கு சிறந்த மருத்துவ காப்பீடு தர தான் நினைப்பதாகவும், 47 வருடங்களில் செய்யாததை 47 மாதத்தில் செய்து விட்டேன் என்றும் டிரம்ப் பெருமிதம் தெரிவித்தார். சில வாரங்களில் கொரோனா தடுப்பு மருந்து வர வாய்ப்பு உள்ளது என்றும் டிரம்ப் கூறினார். அப்போது பேசிய ஜோ பிடன், தேர்தல் பணி ஆரம்பித்த பின் நீதிபதிகளை நியமிப்பதா எனக் கேள்வி எழுப்பினார். பொருளாதாரத்தை எந்த அளவுக்கு சிதைக்க முடியுமோ அந்த அளவுக்கு டிரம்ப் சிதைத்து விட்டார் என்ற ஜோ பிடன், தடுப்பூசி பற்றி டிரம்புக்கு எதுவும் தெரியாது என்றார். அமெரிக்க தேர்தல் வரலாற்றில் அதிபர் வேட்பாளர்கள் இருவரும் நேரடியாக விவாதிப்பது என்பது தொடர்ந்து கடைபிடிக்கப்படும் நடைமுறையாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.


Tags:    

மேலும் செய்திகள்

(25.05.2022) ஏழரை

(24-05-2022) ஏழரை

(23-05-2022) ஏழரை