விளையாட்டு திருவிழா - (09.01.2019) : இந்திய வீரர்களின் செயல்பாடு எப்படி?
விளையாட்டு திருவிழா - (09.01.2019) : இந்தியாவிலேயே நடைபெறுகிறது ஐ.பி.எல் போட்டி
விளையாட்டு திருவிழா - (09.01.2019
ஆஸி.க்கு எதிரான வரலாற்று வெற்றி
இந்திய வீரர்களின் செயல்பாடு எப்படி?
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தொடரில் கலக்கி அதிக மதிப் பெண் பெற்ற பேட்ஸ்மேன் புஜாரா தான். 3 சதம் விளாசிய அவர், 521 ரன்கள் குவித்துள்ளார். இதனால் அவரது செயல்பாட்டிற்கு பத்துக்கு ஒன்பது மதிப்பெண்கள் வழங்கலாம்விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் 350 ரன்கள் விளாசியதுடன், 20 கேட்ச்களை பிடித்து அசத்தியுள்ளார். இதனால் ரிஷப் பண்ட் பத்துக்கு 8 மதிப்பெண்கள் வழங்கலாம் கேப்டன் விராட் கோலி ஒரு சதம், ஒரு அரைசதம் உள்ளிட்ட 282 ரன்கள் விளாசி மூன்றாவது இடத்தில் உள்ளார். கே.எல். ராகுல் உள்ளிட்டவரை அணியில் சேர்த்து கேப்டனாக கோலி சில தவறுகளை செய்துள்ளார். இதனால் அவர் 10க்கு 7 மதிப்பெண்கள் வழங்கலாம்.தொடக்க வீரராக இந்த தொடரில் 2 முறை களமிறங்கிய மாயங் அகர்வால், இந்த தொடரில் 2 அரைசதம் விளாசி 195 ரன்கள் சேர்த்துள்ளார். தொடக்க வீரர்கள் சொதப்பிய போது, அந்த குறையை நிவர்த்தி செய்ததால் மாயங் அகர்வால் 10க்கு 7 மதிப்பெண்கள் பெறுகிறார்2 அரைசதம் உள்ளிட்ட 217 ரன்கள் விளாசிய இந்திய வீரர் ரஹானே, சதத்தை தவறவிட்டார். மேலும் சில அபாரமான கேட்ச்களை பிடித்து அசத்திய ரஹானே 10க்கு 6 மதிப்பெண்கள் கிடைக்கும்.இந்தியாவின் வெற்றிக்கு பெரிதும் பங்காற்றியவர்கள பந்துவீச்சாளர்கள். அதில் முதலிடம் பிடித்து இருப்பவர் பும்ரா, 21 விக்கெட்டுகளை வீழ்த்திய அவர் 10க்கு 9 மதிப்பெண்கள் பெறுகிறார்.வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி 16 விக்கெட்டுகளை வீழ்த்தி 10க்கு8 மதிப்பெண்கள் பெறுகிறார். 11 விக்கெட்டுகளை வீழ்த்திய இஷாந்த் சர்மா 10க்கு 7 மதிப்பெண்கள் கிடைக்கும். கடைசி போட்டியில் காயம் காரணமாக அவர் களமிறங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 2 டெஸ்ட் போட்டிகளில் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி, ஒரு அரைசதம் விளாசிய ஜடேஜாவுக்கு 10க்கு 7 மதிப்பெண்கள் கிடைக்கும்
இந்தியாவிலேயே நடைபெறுகிறது ஐ.பி.எல் போட்டி
வரும் மார்ச்-23 ஆம் தேதி தொடங்குகிறது
சென்னையில் போட்டி நடத்த சிக்கல்?
ஐ.பி.எல். 12வது சீசன் போட்டி வரும் மார்ச் 23ஆம் தேதி தொடங்கும் என பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது. போட்டிகள் வெளிநாட்டுக்கு மாற்றப்படாமல், இந்தியாவிலேயே நடத்தப்படும் என்றும் பி.சி.சி.ஐ. திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. மக்களவை தேர்தல் நடைபெறுவதால், போட்டிகள் வெளிநாட்டுக்கு மாற்றப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பி.சி.சி.ஐ. இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.தேர்தல் அட்டவணை அறிவிக்கப்பட்ட பிறகு, போட்டிகள் நடத்தப்படும் இடங்கள் மற்றும் தேதிகளில் மாற்றம் மேற்கொள்ளப்படும் என்றும் பி.சி.சி.ஐ. தெரிவித்துள்ளது. இறுதிப் போட்டி வரும் மே 13 அல்லது மே 15ஆம் தேதி நடைபெறும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. போட்டியை இந்தியாவில் நடத்துவது குறித்து மத்திய, மாநில அரசுகளுடன் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பிறகே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.பி.சி.சி.ஐ.யின் இந்த அறிவிப்புக்கு அணிகளின் நிர்வாகங்கள் வரவேற்பை தெரிவித்துள்ளன. வெளிநாட்டில் போட்டியை நடத்தினால், போக்குவரத்து, தங்கும் செலவு அதிகரிக்கும் என்றும் அவர்கள் அச்சம் தெரிவித்திருந்தன. மேலும் போட்டியை இந்தியாவில் நடத்துவதன் மூலம் டிக்கெட்டிலிருந்து அணிகளுக்கு வருமானமும் கிடைக்கும். இதனால் ஐ.பி.எல். அணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளன.இதனிடையே, சென்னையில் மீண்டும் போட்டி நடைபெறுமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. கடந்து முறை காவிரி போராட்டத்தால், ஐ.பி.எல். போட்டி மாற்றப்பட்டது. இதனால் சென்னை காவல்துறை பாதுகாப்பிற்கு உறுதி அளித்தால் மட்டுமே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் போட்டி நடத்த முடியும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே, உலகக் கோப்பை போட்டிகள் இம்முறை இங்கிலாந்தில் நடைபெறுவதால் , ஐ.பி.எல். போட்டியையும் இங்கிலந்தில் நடத்தினால் வீரர்களுக்கு அது சிறந்த பயிற்சியாக அமையும் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். உலகின் பணக்கார விளையாட்டு அமைப்பாக விளங்கும் பி.சி.சி.ஐ. ,கூடுதல் செலவு குறித்து யோசிக்கலாமா என்றும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.