விளையாட்டு திருவிழா - 01.10.2018 - மீண்டும் இந்தியா Vs பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி?

இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இருத்தரப்பு கிரிக்கெட் போட்டியை நடத்துவது குறித்து ஐ.சி.சி. தலைமையில் துபாயில் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

Update: 2018-10-01 15:46 GMT
இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இருத்தரப்பு கிரிக்கெட் போட்டியை நடத்துவது குறித்து ஐ.சி.சி. தலைமையில் துபாயில் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.மும்பை தாக்குதலுக்கு பிறகு இந்தியா, பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையிலான உறவு பாதிக்கப்பட்டது. இதனால் இந்தியா, பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியை நடத்த மத்திய அரசு ஒப்புதல் அளிக்கவில்லை.இந்த நிலையில், 2014ஆம் ஆண்டு இந்தியா, பாகிஸ்தான் இருத்தரப்பு தொடரை நடத்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் மத்திய அரசின் ஒப்புதல் கிடைக்கவில்லை என்பதை காரணம் காட்டி இந்தியா, பாகிஸ்தான் போட்டியை நடத்த பி.சி.சி.ஐ. முன்வரவில்லை.இந்த நிலையில் தான் துபாய், இலங்கை அல்லது மலேசியா போன்ற நாடுகளில் கிரிக்கெட் போட்டியை நடத்திக் கொள்ளலாம் என்று  பாகிஸ்தான் யோசனை தெரிவித்தது. இதற்கும் பி.சி.சி.ஐ.  ஒப்புத்ல் அளிக்கவில்லை. இதனால் 500 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர உள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்தது.

* உலகக் கோப்பை போன்ற சர்வதேச தொடரில் தங்களுடன் வெளிநாட்டில் விளையாடும் இந்தியா, இருத்தரப்பு தொடரில் விளையாடினால் என்ன என்று பாகிஸ்தான் தரப்பிலிருந்து வாதம் முன் வைக்கப்பட்டது.நீண்ட நாட்களாக இருக்கும் இந்தப் பிரச்சனையை தீர்க்க ஐ.சி.சி.துபாயில் பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. இதில் ஐ.சி.சி. கூறும் முடிவே இறுதியானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் தீர்ப்பு பாகிஸ்தானுக்கு சாதகமாக தான் வரும் என்று கூறப்படுகிறது. இதனால் இந்தியா, பாகிஸ்தான் இடையிலான இருத்தரப்பு கிரிக்கெட் போட்டி விரைவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
Tags:    

மேலும் செய்திகள்

(25.05.2022) ஏழரை
(24-05-2022) ஏழரை
(23-05-2022) ஏழரை