கர்நாடகாவில், பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக வாட்ஸ்-அப் ஸ்டேட்டஸ் வைத்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். ஹோஸ்பேட் மாவட்டத்தைச் சேர்ந்த ஆலம் பாஷா என்பவர், பாலஸ்தீனத்துக்கு ஆதரவாகவும், இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்த இந்திய அரசுக்கு எதிராகவும் வாட்ஸ்-அப்பில் ஸ்டேட்டஸ் வைத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, சட்டம்-ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் தேசவிரோத வீடியோக்களைப் பரப்பியதாக ஆலம் பாஷாவை போலீசார் கைது செய்தனர். முதற்கட்டமாக அவரது செல்போனில் வைக்கப்பட்டிருந்த ஸ்டேட்டஸ்கள் நீக்கப்பட்டுள்ளன. மேலும் பாலஸ்தீனத்துக்கு ஆதரவு தெரிவித்து ஸ்டேட்டஸ் வைத்ததற்கான காரணம் குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.