காசா மருத்துவமனைக்கு எச்சரிக்கை - மீண்டும் ஒரு படுகொலை? - சர்வதேச நாடுகளுக்கு அவசர அழைப்பு
இஸ்ரேல் ராணுவம் காசாவில் உள்ள அல்-கட்ஸ் மருத்துவமனையை விட்டு உடனடியாக வெளியேற வேண்டும் என அறிவுறுத்தியுள்ள நிலையில் சிகிச்சை பெறும் நோயாளிகள் நிலை கேள்விக்குறியாகி உள்ளது... சுமார் 400 நோயாளிகள், 12 ஆயிரம் இடம்பெயர்ந்தோர் தஞ்சம் அடைந்துள்ள இந்த மருத்துவமனையை உடனடியாக காலி செய்ய சொல்லி இஸ்ரேல் படைகள் எச்சரித்ததாக பாலஸ்தீனிய செம்பிறை சங்கம் தெரிவித்தது. ஆனால் தீவிர சிகிச்சை பெறும் நோயாளிகளை இடம் மாற்றுவது என்பது சாத்தியமற்ற செயல் என்பதால், அல்-அஹ்லி மருத்துவமனையில் நடந்ததைப் போன்ற ஒரு புதிய படுகொலையைத் தடுக்க அவசர நடவடிக்கை எடுக்க சர்வதேச நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது... அல்-அஹ்லி மருத்துவமனையில் நடந்த தாக்குதலில் 500 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.