ஈபிள் டவரும் இந்திய UPI-ம் உலக அரங்கில் தலைநிமிரும் இந்தியா

Update: 2024-02-03 04:56 GMT

பிரான்சில் யு.பி.ஐ. பரிவர்த்தனை அமலுக்கு வந்த நிலையில், யு.பி.ஐ. முறையை உலகளவில் எடுத்துச் செல்ல இது முக்கிய படியாகும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்தியாவின் யு.பி.ஐ. பணப்பரிவர்த்தனையை ஏற்கும் நாடுகளின் பட்டியலில் பிரான்சும் இணைந்துள்ளது. பாரிசில் உள்ள இந்திய தூதரகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், என்.பி.சி.ஐ. சர்வதேச பரிமாற்ற அமைப்பு, பிரான்சின் பரிவர்த்தனை அமைப்பும் இந்த அறிவிப்பை வெளியிட்டன. அதன்படி பிரான்ஸ் நாட்டில் யு.பி.ஐ. மூலமாக பணம் செலுத்த முடியும். மேலும் ஈபிள் டவரை காண விரும்பும் இந்தியர்கள், முன்கூட்டியே யு.பி.ஐ. மூலம் பணம் செலுத்தி, ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, யு.பி.ஐ பரிவர்த்தனையை உலகளவில் எடுத்துச் செல்ல இது முக்கிய படியாகும் என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்