வரலாறு காணாத வறட்சி..ஒரே நாளில் 71 தீ விபத்துகள் - மளமளவென பரவும் தீயின் காட்சிகள்
#mexico | #fire
வரலாறு காணாத வறட்சி..ஒரே நாளில் 71 தீ விபத்துகள் - மளமளவென பரவும் தீயின் காட்சிகள்
மெக்சிகோவில் வரலாறு காணாத வகையில் ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக, உருவான காட்டுத் தீயால், ஏராளமான விவசாய நிலங்கள் சேதமடைந்தன. மெக்சிகோ நகரத்தின் புறநகர் பகுதிகளில் ஏற்பட்ட காட்டுத்தீ, காற்றின் வேகத்தால் மளமளவென பரவி வருகிறது. இதனையடுத்து, விவசாய நில உரிமையாளர்களும், தீயணைப்பு வீரர்களும் தீயை கட்டுப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். நௌகல்பானில், சோள வயலில் ஏற்பட்ட தீயை அணைக்க குடியிருப்பாளர்கள் மணிக்கணக்கில் போராடினர். இதற்கிடையே, மெக்சிகோவின் வன தேசிய ஆணைய தரவின்படி, மெக்சிகோவில் ஒரே நாளில் 71 தீ விபத்துகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.