ஆகாயத்தில் நடக்கும் அதிசய வீரர்..மெய்சிலிர்த்து பார்த்த மக்கள்..பிசுறு தட்டாமல் பிரெஞ்சு வீரர் சாதனை
சிலி நாட்டின் சாண்டியாகோவில், பிரெஞ்ச் வீரர் நாதன் பாலின் 50 அடி உயரத்தில் இரு கட்டடங்களுக்கு இடையே கட்டப்பட்ட 886 அடி நீள கயிற்றில் நடந்து சாதனை படைத்துள்ளார். பாதுகாப்பு அம்சங்களுடன் வெற்றிகரமாக கயிற்றின் மீது நடந்து இலக்கை அவர் எட்டியதும், கீழே திரண்டிருந்த பார்வையாளர்கள் கைகளைத் தட்டியும், ஆராவாரம் செய்தும் பாராட்டு தெரிவித்தனர். சாண்டியாகோ நகரில் நடைபெறும் நாடக திருவிழாவின் தொடக்கத்தையொட்டி, இந்த சாதனையை நாதான் பாலின் நிகழ்த்தியுள்ளார். ஏற்கனவே, கடந்த 2021ம் ஆண்டில், பாரீசில் உள்ள ஈபிள் கோபுரத்தின் முதல் தளத்தில் தரையில் இருந்து 230 அடி உயரத்தில், கட்டப்பட்ட ஆயிரத்து 968 அடி நீள கயிற்றில் நடந்து சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது