இலங்கை நாடாளுமன்றம் அருகே வேலையில்லா பட்டதாரிகள் சங்கத்தினர் போராட்டம் நடத்திய நிலையில் அவர்களைத் தண்ணீரைப் பீய்ச்சி அடித்து போலீசார் கலைக்க முயன்றதால் பரபரப்பு நிலவியது. அதேபோல் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு கோட்டை - லோட்டஸ் வீதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் ஓய்வூதிய சங்கங்களின் தேசிய அமைப்பினரும் கொழும்பு பத்தரமுல்லை பகுதியில் போராட்டம் நடத்தினர். ஒரே நாளில் 3 பெரிய போராட்டங்கள் நடந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.