இடஒதுக்கீட்டால் வெடித்த வன்முறை - பற்றி எரியும் வங்கதேசம் - காவு வாங்கப்பட்ட உயிர்கள்

Update: 2024-07-19 11:19 GMT

பாகிஸ்தானுக்கு எதிரான போரில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு, அரசுப்பணியில் 30 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் முறை வங்கதேசத்தில் இருந்து வந்தது. கடும் எதிர்ப்பு காரணமாக 2018ல் இந்த இட ஒதுக்கீடு முறை நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் நடைமுறைப்படுத்த உள்ளதாக அரசு அறிவித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் நிலையில், அரசு தொலைக்காட்சி நிலையமும் சூறையாடப்பட்டது. சில இடங்களில் போராட்டம் வன்முறையாக வெடித்ததில், தற்போது வரை 39 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்