இந்தியா, ஐரோப்பிய ஒன்றியம், இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, போலந்து உள்ளிட்ட நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. தாக்குதலில் ஈடுபட்டுள்ள ஹமாஸ் தீவிரவாதிகளை வீழ்த்தி வெற்றி பேற வேண்டும் என உக்ரைன் தெரிவித்துள்ளது. இதே போன்று, இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்துள்ள அமெரிக்கா, இஸ்ரேலின் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான உதவிகள் செய்யப்படும் என அறிவித்துள்ளது. அதே நேரத்தில், ஈரான், சவுதி அரேபியா, கத்தார், ஓமன், குவைத், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. இதனிடையே, இருதரப்பும் போர் நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும் என ரஷ்யா வேண்டுகோள் விடுத்துள்ளது.