பெருவில் போக்குவரத்து சிக்னலில் நின்று கொண்டு இருந்த வாகனங்கள் மீது பேருந்து மோதியதில் 10 காயம் அடைந்தனர். லா மோலினா பகுதியில் உள்ள சிக்னலில் 20க்கும் மேற்பட்ட வாகனங்கள் நின்ற நிலையில் பின்னால் சென்ற பேருந்து மோதி கவிழ்ந்தது. அதில் காயம் அடைந்தவர்களை போலீசார் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பேருந்தில் பிரேக் செயல் இழந்ததே விபத்துக்கு காரணம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.