காசாவுக்கு மக்களுக்கு ஆதரவாக பாலஸ்தீனியர்கள் போராட்டம் - தீக்கிரையாகும் வாகனங்கள்

Update: 2023-10-14 06:11 GMT

காசாவில் உள்ள மக்களுக்கு ஆதரவாக, வெஸ்ட் பேங்க் நகரில் நடைபெற்ற போராட்டங்களில் வன்முறை வெடித்த‌தால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது.

பாலஸ்தீனத்தை சேர்ந்த மேற்கு கரை எனப்படும் வெஸ்ட் பேங்க் நகர், இஸ்ரேலின் கட்டுடில் உள்ளது. இங்கு, ஹெப்ரான், நெப்லஸ் உட்பட பல்வேறு பகுதிகளில் பாலஸ்தீனியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பாலஸ்தீன் கொடியை ஏந்திக்கொண்டு ஊர்வலமாக சென்றும், ஆங்காங்கே தொழுகையில் ஈடுபட்டும், போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, இனப்படுகொலையை நிறுத்துமாறும், அமெரிக்க முதலாளித்துவம் போருக்கு வழிவகுப்பதாகவும் குற்றம் சாட்டி முழக்கங்களை எழுப்பினர். இதனிடையே, பல்வேறு பகுதிகளில் இஸ்ரேல் பாதுகாப்புப்படைக்கும், போராட்டக்கார‌ர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால் வன்முறை வெடித்த‌து. இதனால், ஆங்காங்கே, டயர்களையும், வாகனங்களையும் தீ வைத்து எரித்து போராட்டக்கார‌ர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதே நேரத்தில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 9 பேர் உயிரழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்