பரிதாப நிலையில் பாலஸ்தீனம் - பச்சாதாபம் காட்டாத இஸ்ரேலுக்கு - எச்சரிக்கை விடுத்த கத்தார் மன்னர்
இஸ்ரேல் காசா என இருதரப்பிலுமே அப்பாவி பொதுமக்கள் கொல்லப்படுவதற்கு கத்தார் மன்னர் தமீம் பின் ஹமத் அல் தானி கண்டனம் தெரிவித்துள்ளார்...
பாலஸ்தீன குழந்தைகள் ஏதோ அடையாளம் இல்லாதவர்களைப் போல் நடத்தப்படுவதாக சர்வதேச சமூகத்தை அவர் குற்றம் சாட்டினார். பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் தாக்குதலைத் தீவிரப்படுத்துவது கவலை அளிப்பதாகத் தெரிவித்த அவர், இது சர்வதேச சட்டங்கள், மத மற்றும் சமூக ஒழுக்க நெறிகளுக்கு எதிரானது என சாடினார். பாலஸ்தீனியர்களை வெளியேற்றுவது மற்றும் அவர்களின் நிலத்தை அடிமையாக்குவது போன்ற சட்டவிரோத அட்டூழியங்களைத் தொடர இஸ்ரேலுக்கு நிபந்தனையற்ற பச்சைக்கொடி காட்ட முடியாது என்று தெரிவித்த அவர், தண்ணீரை, மருந்தை, உணவை தடை செய்ய இஸ்ரேலை அனுமதிக்கக் கூடாது என வலியுறுத்தி, போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தார்.