சின்னம் மறுப்பு - சிறையில் அடைப்பு.. ஆனாலும் முந்தும் இம்ரான் கான் பாகிஸ்தான் அரசியலில் தலைகீழ் திருப்பம்
பாகிஸ்தானின் பாராளுமன்ற தேர்தல் நேற்று விறுவிறுப்பாக நடைபெற்றது. நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லீம் லீக்-நவாஸ் கட்சிக்கும் இம்ரான் கானின் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. தேர்தல் முடிந்து வாக்கு எண்ணிக்கை துவங்கிய நிலையில், இம்ரான் கான் கட்சியினர் அதிக இடங்களில் முன்னிலை வகிப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இம்ரானின் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சிக்கு பேட் சின்னம் வழங்க தேர்தல் ஆணையம் தடை விதித்திருந்த நிலையில், அவரது கட்சியினர் சுயேட்சையாக களமிறங்கினர். இந்நிலையில் பெரும்பாலான இடங்களில் இம்ரான் ஆதரவாளர்கள் முன்னிலை வகிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.