ஹமாஸ் வசமுள்ள எஞ்சிய இஸ்ரேலிய பிணை கைதிகளை மீட்க கோரி டெல் அவிவ் நகரில் பல்லாயிரக்கணக்கானோர் வீதியில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என்றும் ஹமாசிற்கு மேலும் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர். மேலும் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் பொருட்களை தீயிட்டு கொளுத்தி முழக்கமிட்டனர்.